தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம்..!
குமாரபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.;
குமாரபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
லோக்சபா தேர்தல் ஏப். 19ல் தமிழகத்தில் நடைபெறுவதையொட்டி, அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமாரபாளையம் தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ், வடக்கு மற்றும் தெற்குப் நகரப்பகுதி முழுதும் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். இவர் பேசியதாவது:
ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குடும்பம் பா.ஜ.க.வில் உள்ளது. இவர் மட்டும் அ.தி.மு.க.வில் உள்ளார். இது நாடக அரசியல். யாரும் நம்ப வேண்டாம். இ.பி.எஸ். கூட பா.ஜ.க.வை விமர்சிப்பது இல்லை. ஸ்டாலின் அமல் படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, பா.ஜ.க. அண்ணாமலை, வெற்றி பெற்று வந்து, நிறுத்தி விட போவதாக கூறி உள்ளார். அதற்கு பதில் தரும்படி, ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கை வைத்து பார்க்கட்டும், என்று ஸ்டாலின் கூறியுள்ளார். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வேட்பாளர் வெற்றிபெற சிறப்பு வழிபாடு நடத்தபட்டு, வேட்பாளருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.குமாரபாளையம் வடக்கு நகர பொறுப்பாளரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், கவுன்சிலர்கள் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.