குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

குமாரபாளையத்தில், தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-10 00:00 GMT

குமாரபாளையத்தில், தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,  பேச்சாளர் தஞ்சை காமராஜ் பேசினார்.

குமாரபாளையத்தில்,  தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க  பொதுக்கூட்டம்,  உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம், நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில்,  முன்னாள் சேர்மன் ஜெகநாதன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி, தலைமை சொத்து பாதுகாப்புகுழு உறுப்பினர் மாணிக்கம், பள்ளிபாளையம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் யுவராஜ், பேச்சாளர்கள் தஞ்சை காமராஜ், கந்திலி கரிகாலன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

தஞ்சை காமராஜ் பேசியதாவது: அ.தி.மு.க.வினர் திவாலான அரசாக விட்டு சென்றனர். பட்ஜெட் போடும் போது செலவினங்கள் சமாளிக்க போதிய நிதி இல்லாத நிலையால் வரி உயர்வு அறிவித்தார் முதல்வர்.  மருத்துவத்துறையில் மட்டும் 7.5 சதவீதம் பெற்று தந்தவர் அ.தி.மு.க. முன்னாள் முதல்வர். அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து துறையிலும் 7.5 சதவீதம் பெற்று தந்தவர் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் அன்பரசு, அன்பழகன், ராஜ்குமார், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், கதிரவன்சேகர், ராஜ், புஷ்பா, அம்பிகா, பரிமளம், தீபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News