குமாரபாளையத்தில் திமுக கிளை செயலர்கள் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் கிளை கழக செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் கிளை கழக செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் கிளை கழக செயலர்கள் ஆலோசனை கூட்டம் நகர செயலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. ஜூலை 3ம் தேதி நடைபெறவுள்ள தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை, மாவட்ட செயலர் மூர்த்தி தலைமையில் வரவேற்பு கொடுப்பது என்றும், அதில் குமாரபாளையம் நகர தி.மு.க. சார்பில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் ரவி, ரேவதி, பன்னீர்செல்வம், மற்றும் மகளிரணியினர் பங்கேற்றனர்.