காவிரி கரையோர பகுதியில் பார்வையிட்ட தி.மு.க., அ.தி.மு.க.வினர்

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் பார்வையிட்டனர்.;

Update: 2022-07-16 12:45 GMT

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் தி.மு.க.,வினர் நகர செயலர் செல்வம் தலைமையில் பார்வையிட்டனர்.

காவிரியில் நீர் வரத்து அதிகம் உள்ளதால் கரையோர பகுதி மக்களை நேரில் சந்தித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் ஆறுதல் கூறினர்.

காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அ.தி.மு.க. நகர் செயலர் பாலசுப்ரமணி தலைமையிலும், தி.மு.க. நகர செயலர் செல்வம் தலைமையில் நகராட்சி அலுவலகம், பழைய காவேரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பார்வைட்டு ஆறுதல் கூறினார்.

நகராட்சி நடராஜா திருமண மண்டபம், புத்தர் வீதி நகராட்சி துவக்கப்பள்ளி கட்டிடம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது என எடுத்துரைத்தனர். தி.மு.க. நிர்வாகிகள் ரவி, ராஜ்குமார், புவனேஷ், கவுன்சிலர் கள் ரங்கநாதன், சத்தியசீலன் உள்ளிட்டவர்களும், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் நகர செயலர் குமணன், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுனன் உள்ளிட்டவர்களும் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News