குமாரபாளையத்தில் தே.மு.தி.க. தேர்தல் அலுவலகம் திறப்பு
குமாரபாளையத்தில் தே.மு.தி.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் தே.மு.தி.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் நகரமன்ற தேர்தலில் 8 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளை கவனிக்க 14வது வார்டு பகுதியில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நகர செயலர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் விஜய்சரவணன் பங்கேற்று ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர். வேட்பாளர்கள் கோமளா, ரேணுகா, சுரேஷ்குமார், வெள்ளிங்கிரி, சாந்தி, சுந்தராம்பாள்,பன்னீர்செல்வம், பழனி ஆகியோர் அறிமுகப்படுதபட்டனர். விஜய்சரவணன் பேசியதாவது:
தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு அனைத்து தொண்டர்களும் ஒன்றாக பணியாற்றி வெற்றி பெற வைக்க வேண்டும். வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி, வாக்குறுதிகளை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். கட்சியின் தலைவர் இதுவரை மக்களுக்கு செய்த சேவைகளை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நகர அவை தலைவர் மணியண்ணன், பொருளாளர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.