அங்கன்வாடிக்கு உதவி செய்த தேமுதிக நிர்வாகிகள்
பள்ளிபாளையத்தில் தேமுதிக சார்பில் அங்கன்வாடிக்கு மின் விசிறி, பாய்கள், சிற்றுண்டி வழங்கப்பட்டது.;
பள்ளிபாளையம் நகராட்சி நேரு நகர் அங்கன்வாடியில் மாவட்ட செயலர் விஜய்சரவணன் 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கினார்.
பள்ளிபாளையம் நகராட்சி நேரு நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதையறிந்த தே.மு.தி.க.வினர் உதவிகள் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நடைபெற்ற விழாவில் நகர செயலர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் விஜய்சரவணன் பங்கேற்று, அங்கன்வாடிக்கு கட்சி தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மின் விசிறி, குழந்தைகள் தூங்குவதற்கு பாய்கள், சிற்றுண்டி உள்ளிட்ட 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.