களை கட்டிய தீபாவளி: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கடைகள்

தீபாவளியை முன்னிட்டு, குமாரபாளையத்தில் உள்ள வியாபார நிறுவனங்கள், கடைகள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. வியாபாரம் களை கட்டியுள்ளது.

Update: 2021-11-02 23:30 GMT

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் குமாரபாளையம் நகர கடைவீதிகள்.  இடம்: சேலம் சாலை.

குதீபாவளி திருவிழா நவ. 4ல் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தீபாவளிக்கென பொருட்களை வாங்க, கடைவீதிகளை முற்றுகையிட்டுள்ளனர். அவ்வகையில்,  குமாரபாளையத்திலும் தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளது.
குறிப்பாக, குமாரபாளையம்  சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலைகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், டி.வி., பிரிட்ஜ், விற்பனை கடைகள், செல்போன் கடைகள், மளிகைக்கடைகள், பட்டாசு கடைகள், இனிப்புகள் விற்கும் கடைகள் உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்கள்,  வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, காண்போரை கவரும் விதமாக ஜொலித்து வருகின்றன.

குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள கடைகள் வண்ண விளக்குகளால் மின்னுகின்றன. 

பொதுமக்களும் தங்கள் குடும்பத்தினருடன் கடைகளுக்குச்  சென்று,  தங்களுக்கு தேவையானவற்றை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். தலைதீபாவளி கொண்டாடவிருக்கும் உள்ளூரில் இருக்கும்  புதுமணத்தம்பதிகள் மற்றும் வெளியூரில் இருந்து குமாரபாளையம் வந்து தலை தீபாவளி கொண்டாடுவோரும், உற்சாகத்துடன் கடைவீதிகளில் வலம் வந்தனர். பல மாவட்டங்களில் மழையால் வியாபாரம் பாதித்த நிலையில், குமாரபாளையத்தில் மழை இல்லாததால், வியாபாரிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். 

Tags:    

Similar News