டிவைடரில் ஒளிரும் விளக்கு இல்லாததால் விபத்து அபாயம்

குமாரபாளையத்தில் உள்ள டிவைடரில் ஒளிரும் விளக்கு இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.;

Update: 2025-04-05 10:53 GMT

டிவைடரில் ஒளிரும் விளக்கு

இல்லாததால் விபத்து அபாயம்


குமாரபாளையத்தில் உள்ள டிவைடரில் ஒளிரும் விளக்கு இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் சேலம் சாலை குளத்துக்காடு பகுதியில், சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிரும் விளக்குகள், ஸ்டிக்கர்கள் வைக்காததால், இரவு நேரங்களில் அதிக அளவிலான வாகனங்கள் இந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகி, பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். பலமுறை புகார்கள் கொடுத்ததும் இதுவரை நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் கூறினார்கள். அவ்வப்போது சாலைகளின் வழியாக வந்து, சாலை பழுது உள்ளதா? டிவைடர் ஒழுங்காக உள்ளதா? வேகத்தடைகளில் வெள்ளை பெயின்ட் உள்ளதா? அவசியமான இடங்களில் வேகத்தடை உள்ளதா? சாலைகளில் ஆக்கிமிப்புகள் உள்ளதா? அவ்வாறு இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் வசம் எடுத்து சொல்லி, உடனுக்குடன் பிரச்சனை சரி செய்தால் பின்னாளில் அதிக அளவிலான ஆக்கிரமிப்பு உருவாகி, எடுக்க முடியாத நிலை ஏற்படும். இவைகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு, பலரும் பாதுகாக்கப் படுவார்கள்.

படவிளக்கம் : 

குமாரபாளையத்தில் உள்ள டிவைடரில் ஒளிரும் விளக்கு இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

Similar News