வட்டார போக்குவரத்து அலுவலர் வாகன சோதனை

குமாரபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டு வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2024-11-27 12:30 GMT

வட்டார போக்குவரத்து அலுவலர் வாகன சோதனை

குமாரபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டு வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பூங்குழலி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகிய இருவரும் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் டி மார்ட் அருகில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த எட்டு நபர்களுக்கும், மொபைல் போனில் பேசி வந்த மூன்று நபருக்கும், அதிக பாரம் ஏற்றிய ஒரு லாரி வாகனத்திற்கும், வரி செலுத்தாத பிற மாநில லாரி ஒன்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையாக 43 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் பிற வாகனங்கள் மூலம் சாலை வரியாக ரூபாய் 7 ஆயிரத்து 090 ரூபாய், அபராத தொகை ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது

குமாரபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டு வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News