மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி: குமாரபாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட அளவிலான ஓவியம், ஸ்லோகன் எழுதும் போட்டியில் குமாரபாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
கொரோனா விழிப்புணர்வு குறித்து மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம், வினாடி வினா, பேச்சு, ஸ்லோகம் எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் அவர்களது பள்ளிகளிலேயே நடத்தப்பட்டன.
மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில், குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி காவியஸ்ரீ ஓவிய போட்டியில் முதல் பரிசும், விட்டலபுரி ஜே.கே.கே.ரங்கம்மாள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவன் தனுஷ் ஸ்லோகன் எழுதும் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
தலைமை ஆசிரியைகள் கவுசல்யாமணி, செல்லம்மாள் மற்றும் ஜே.கே.கே.ரங்கம்மாள் பள்ளி நிர்வாகிகள் செந்தாமரை, ஓம் சரவணா உள்பட பலர் வாழ்த்தினர்.
.