மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு..!

குமாரபாளையம் தீயணைப்பு அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2023-12-09 04:45 GMT

குமாரபாளையம் தீயணைப்பு படையினர் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் தீயணைப்பு படையினர் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

மாவட்ட அளவில் குமாரபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல், கொல்லிமலை ஆகிய ஆறு இடங்களில் தீயணைப்பு படை மற்றும் மீட்பு படையினர் செயல்பட்டு வருகிறார்கள். தீ விபத்து, கிணற்றில் விழுந்த நபர்களை அல்லது விலங்குகளை காப்பாற்றுதல், ஆற்றில் விழுந்தவர்களை மீட்பது, உள்ளிட்ட பல்வேறு பணிகள் உடனுக்குடன் செய்து வருகின்றனர்.

மாவட்ட அளவில் 12 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்பினால் மக்கள் பணி செய்ய எதுவாக இருக்கும். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மில்கள், விசைத்தறி, கைத்தறி கூடங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஏரி, காவிரி கரையோரம், ஆகியவற்றில் விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்சிகளை செய்து காட்டி பொதுமக்களுக்கு, தீ விபத்து மற்றும் இதர விபத்துகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இந்த ஆய்வில் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக உள்ளதா? தீயணைப்பு வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? பதிவேடுகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பது உள்ளிட்ட பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். இதில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News