லோக் ஜன சக்தி கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்!
குமாரபாளையம் தாலுகாவில் புற்றுநோய் பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என லோக் ஜன சக்தி கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
லோக் ஜன சக்தி கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
குமாரபாளையம் தாலுகாவில் புற்றுநோய் பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என லோக் ஜன சக்தி கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளிபாளையம் தனியார் மண்டபத்தில் லோக் ஜன சக்தி கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ஆதவன் முன்னிலை வகித்தார். . மாநில தலைவர் வித்யாதரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு , தனியார் மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. குமாரபாளையம் பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு சாயப்பட்டறைகள் இயங்கி வருவதால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், காவிரி ஆற்றில் கலப்பதாலும் அதை பொதுமக்கள் பயன்படுத்துவதாலும், பொதுமக்களுக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குமாரபாளையம் தாலுகாவில் சாய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். புற்றுநோய் பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட, நகர ஒன்றிய, நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.