குமாரபாளையத்தில் காலாவதியாகும் மருந்து பொருட்கள் விநியோகம்: மக்கள் எதிர்ப்பு

குமாரபாளையத்தில் காலவதியாக குறைந்த நாட்கள் உள்ள மருந்து வினியோகம் செய்யப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-04-20 12:45 GMT

குமாரபாளையம் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட ஏப்ரல் மாதம் காலாவதியாகும் மருந்து.

குமாரபாளையம் பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், கே.ஒ.என்.தியேட்டர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்த நர்ஸ்கள், குழந்தைகளுக்கு காய்ச்சல் மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர்கள் பார்த்து, ஏப்ரல் மாதம் காலாவதியாகும் மருந்தை கொடுத்ததற்கு கடும் ஆட்சேபனை செய்தனர்.

குறைந்தபட்சம் ஆறு மாத காலம் பிறகு காலாவதியாகும் மருந்தையாவது கொடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வட்டார மேற்பார்வையாளர் பாலு கூறுகையில், இனி இதுபோல் நடக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News