மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு வினியோகம்
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு பொது சேவைகள் மற்றும் கல்வி சேவைகளை செய்து வரும் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட செயலர் காமராஜ், நிர்வாகிகள் நந்தகுமார், கோபாலகிருஷ்ணன், யோகராஜ், மனோகரன், கிருஷ்ணன், செந்தில்நாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.