குமாரபாளையம் அரசு பள்ளியில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வினியோகம்
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் பா.ஜ.க. சார்பில் தேசியக்கொடி வழங்கப்பட்டதுடன் நகரெங்கும் தேசியக்கொடியால் அலங்கரிக்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு பள்ளியில் பா.ஜ.க. சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எஸ்.ஐ. முருகேசன் வாழ்த்தி பேசினார். பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன் கொடிகளை வினியோகம் செய்து, தேசியக்கொடியை எப்படி கட்ட வேண்டும், எவ்வாறு பராமரிக்க வேண்டும், அதற்குரிய மரியாதையை எவ்வாறு செலுத்த வேண்டும் என எடுத்துரைத்தார். பொதுநல அமைப்பின் தலைவர் வக்கீல் தங்கவேல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் குமாரபாளையம் நகரில் இடைப்பாடி சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பல பகுதியில் தேசிய கொடிகளால் அலங்கரித்தனர்.