தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாணவியர் வசம் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் குமாரபாளையம் அனைத்து கல்வி நிறுவனங்கள் முன்பு, மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்று விஜய் எழுதிய வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன;
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாணவியர் வசம் துண்டு பிரசுரங்கள் விநியோகம்
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் குமாரபாளையம் அனைத்து கல்வி நிறுவனங்கள் முன்பு, மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்று விஜய் எழுதிய வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
சமீப காலமாக தமிழகத்தில் பல இடங்களில் பெண்களுக்கு, மாணவிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை கல்வி நிறுவனத்திற்கு அனுப்ப அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், தான் ஒரு கடிதம் எழுதி, அதனை மாணவியர்கள் வசம் விநியோகம் செய்ய சொன்னதின்பேரில், அவரது கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினருடன், குமாரபாளையம் கல்வி நிறுவனங்கள் முன்பு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அன்பு தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு, நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமை தங்கைகள், பெண் குழந்தைகள், என அனைத்து தரப்பு பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம், ஒழுங்கு சீர்கேடுகள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக, மன அழுத்தத்திற்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பலனும் இல்லை, என்பது தெரிந்ததே. அடஹர்காகவே இந்த கடிதம். எல்லா சூழ்நிலைகளிலும் நிச்சயம் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். உங்கள் அண்ணன், விஜய்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் நகர செயலர் சக்திவேல், நிர்வாகிகள் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் குமாரபாளையம் அனைத்து கல்வி நிறுவனங்கள் முன்பு, மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்று விஜய் எழுதிய வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன