குமாரபாளையம் திமுக சார்பில் 100 நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்

குமாரபாளையத்தில் அரசின் 100 நாள் சாதனை துண்டு பிரசுரங்களை திமுகவினர் வினியோகம் செய்தனர்.;

Update: 2021-08-22 14:30 GMT

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் 100 நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. (தம்மண்ணன் வீதி)

தி.மு.க. அரசு பதவியேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி மாநிலம் முழுதும் 100 நாள் சாதனை விளக்கக் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் வார்டு வாரியாக 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

25வது வார்டில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, காவேரி நகர் பாலம் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News