குமாரபாளையத்தில் திமுக உட்கட்சி தேர்தல் விண்ணப்பம் வினியோகம்
குமாரபாளையத்தில் தி.மு.க. உட்கட்சி தேர்தல் விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.;
குமாரபாளையத்தில் தி.மு.க. உட்கட்சி தேர்தல் விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. குமாரபாளையம் நகர 33 வார்டு பொறுப்பாளர்களுக்கான தி.மு.க. உள்கட்சி தேர்தலில், ஏப். 22 வேட்புமனு தாக்கல், ஏப். 26ல் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஒப்படைத்தல், ஏப். 28ல் உள்கட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் வேட்புமனு வினியோகம் துவங்கியது. மேலிட பார்வையாளரும், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளரும், வழக்கறிஞருமான கிரிசங்கர் பங்கேற்று வார்டு தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு வேட்புமனுக்கள் வழங்கினார். இதில் நிர்வாகிகள் அன்பரசு, ராஜ்குமார், ரவி,செல்வராஜ், செந்தில், ஜேம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.