குமாரபாளையம் நகராட்சியில் சின்னம் பொருத்துவதில் அதிருப்தி: பெண் வேட்பாளர்கள் தர்ணா

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சின்னம் பொருத்துவதில் அதிருப்தி ஏற்பட்டதால் பெண் வேட்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-11 13:30 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சின்னம் பொருத்துவதில் அதிருப்தி ஏற்பட்டதால் பெண் வேட்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்றது. இதில் பெண் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்ட ஒரு இயந்திரம் மட்டுமே காட்டப்பட்டது என்றும், மற்றொன்று காண்பிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் பெண் வேட்பாளர்கள் அதிருப்தியடைந்ததால் நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்த நகராட்சி கமிஷனர் சசிகலா பெண் வேட்பாளர்களிடம் பேசி, பாரபட்சம் இல்லாமல் பணிகள் நடக்கும் என உறுதி கூறியதால் தர்ணா போராட்டத்தை பெண் வேட்பாளர்கள் கைவிட்டனர். இந்த தர்ணா போராட்டம் 5 நிமிடம் நடைபெற்றது.

இது பற்றி 19வது வார்டு தி.மு.க. பெண் வேட்பாளர் ரம்யா கூறுகையில், எங்கள் வார்டுக்குரிய சின்னங்கள் பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூன்றில் இரண்டு மட்டுமே காட்டப்பட்டது. மற்றொன்று காட்டப்படவில்லை. கேட்டதற்கு முன்பே அதன் பணிகளை முடித்து விட்டோம் என்றனர். இதனால் அதிருப்தியடைந்தோம் என அவர் கூறினார்.

Tags:    

Similar News