பள்ளிப்பாளையத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி முகாம்

பள்ளிபாளையத்தில் பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து பயிற்சி முகாம் தீயணைப்புத் துறையின் சார்பில் நடைபெற்றது.

Update: 2022-01-23 13:15 GMT

பள்ளிப்பாளையத்தில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்த செயல்முறை விளக்கக் முகாம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

பருவமழை பெய்து வருவதால், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண் ஒருவர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்படுவது போலவும், அவரை மீட்பு படையினர் மிதவைகள், கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை பாதுகாப்பது போலவும் தத்ரூபமாக செய்து காட்டினர்.

பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்ற விழிப்புனர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மீட்பு படையினர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

Tags:    

Similar News