குமார பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையேற்றம் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-15 11:03 GMT
குமார பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தினாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தலைவர் பராசக்தி தலைமையில்  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  வாரச்சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்திற்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி குடும்ப தலைவர் அட்டை வைத்துள்ள குடும்பத்திற்கு மானிய விலையில் கியாஸ் வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் போடப்பட்டன. மாவட்ட அமைப்பாளர் முருகேசன், சண்முகம், அர்சுனன், சசிகலா, செல்வராணி, மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News