குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க பேரவை கூட்டம்

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-22 04:15 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சங்க பேரவை கூட்டத்தில்,   மாநில பொதுச்செயலாளர் நம்பிராஜன் பேசினார். 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம், குமாரபாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில்,  நிர்வாகி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலர் நம்பிராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். மாவட்ட அமைப்பாளராக முருகேசன், பராசக்தி, நடேசன், சின்னராசு, செல்வராணி, சசிகலா, லலிதா ஆகியோர்,  அமைப்புக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.

உதவித்தொகை மாதம் மூவாயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, நவ.30ல் மறியல் செய்வது, மாற்றுத்தினாளிகளுக்கு குடும்ப அட்டை ஏ.ஒய்.ஒய். 35 கிலோ அட்டையாக மாற்றி வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் நான்கு மணி  நேர வேலைக்கு 272 ரூபாய் வழங்க வேண்டும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முகாம் நடத்தி உடனே அடையாள அட்டை வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும், ரயில் பாஸ், பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் கந்தசாமி, ரங்கசாமி, சக்திவேல், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News