குமாரபாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் சுகாதார துறை இயக்குனர் ஆய்வு

குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மாநில பொது சுகாதார துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-09 10:45 GMT

குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்புகளை மாநில பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார்.

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், குமா பாளையத்தில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகளை மாநில பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் மையத்திற்கு சென்று ஆறுதல் கூறி, சுகாதார பணிகள் குறித்து உடன் வந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News