குமாரபாளையம் பகுதிகளில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நேரில் ஆய்வு

குமாரபாளையம் பகுதிகளில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-04-02 13:30 GMT

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சுல்தானா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக மண்டலஇயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி, திடக்கழிவு மேலாண்மை பணி, வரி வசூல், தூய்மை பணி, போர்வெல், குடிநீர் வினியோகம், அலுவலக பணிகள் உள்ளிட்ட பல பணிகள் மாதம் தோறும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரால் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

நேற்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இவருடன் கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர்.

Tags:    

Similar News