குமாரபாளையத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா
குமாரபாளையத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா, விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் நடைபெற்றது.;
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில், அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. அவரது திருவுருவப்படத்திற்கு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பேச்சு, கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேல் புத்தகங்கள் பரிசாக வழங்கினார். ஆங்கில உச்சரிப்பு பயிற்சி ஆசிரியர் சண்முகம், சேவற்கொடியோர் பேரவை தலைவர் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.