தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தாரின் உயர் கல்வி வழிகாட்டி
குமாரபாளையத்தில் தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தாரின் சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.;
தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தாரின் உயர் கல்வி வழிகாட்டி
குமாரபாளையத்தில் தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தாரின் சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் பகுதியில் தேவாங்கர் சமுதாயத்தினர் சார்பில் பல கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் தேவாங்கர் குலம் மற்றும் அனைத்து சமூக மாணவ, மாணவியருக்கு சிறப்பு சலுகை மற்றும் கட்டண சலுகை பெறும் வகையில், தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தாரின், குமாரபாளையம் கல்வி வட்டாரம் சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து பகுதிகளில் உள்ள தேவாங்கர் குல கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். மதிப்பெண் அடிப்படையில் சிறப்பு சலுகை மற்றும் கட்டண சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் பங்கேற்று, தங்கள் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் பற்றி விளக்கமளித்தனர். ஒவ்வொரு கல்லூரிகளின் குறிப்பேடுகள் அனைத்து மாணவ, மாணவியருக்கும் வழங்கப்பட்டன. இது பற்றி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூறியதாவது:
பள்ளிப்படிப்பு முடிந்த நிலையில், கல்லூரி படிப்பில் சேர, குழப்பமான மனநிலை இருந்தது. அதற்கு விடை தரும் வகையில் இந்த தேவாங்கர் சமுதாய உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்வி குழுமம், எஸ்.எஸ்.எம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஜே.கே.கே. முனிராஜா கல்வி குழுமம், எஸ்.எஸ்.எம். செவிலியர் மற்றும் மருந்தாளுனர் கல்லூரிகள், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் சௌடேஸ்வரி கல்லூரி, உள்பட பல கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தாரின் சார்பில் நடந்த உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா பேசினார்.