காக்கா குருவியைக்கூட காணோம்... வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்!
கொரோனா தொற்று அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக, வாகன போக்குவரத்தின்றி, கடைகள், மக்கள் நடமாட்டம் இல்லாமல் பள்ளிபாளையம் பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.;
பயணிகள் நடமாட்டமின்றி, வெறிச்சோடி காணப்படும் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதி, எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு அமலுக்கு வந்ததால், ஒரு மாதத்திற்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால், தமிழக அரசு ஒருசில தளர்வுகளை அறிவித்ததுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் பேருந்துகள் இயங்கவில்லை.
அதேபோல், வணிக நிறுவங்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு இருந்ததால், பள்ளிப்பாளையத்தில் மக்கள் நடமாட்டமின்றி, பேருந்து நிறுத்த பகுதி உள்ளிட்ட பல இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா பரவல் அச்சம், அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து பள்ளிப்பாளையமே வித்தியாசமாக காட்சியளித்தது.