குமாரபாளையத்தில் வேட்பாளர்கள் வராமல் வெறிச்சோடிய நகராட்சி அலுவலகம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முதல் நாளில் வேட்பாளர்கள் வராமல் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் வெறிச்சோடியது.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று முதல் நாள் என்பதால் வேட்புமனுக்கள் பெற அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். எஸ்.ஐ.க்கள் மலர்விழி, சிவகுமார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நல்ல காரியங்கள் செய்ய வெள்ளிக்கிழமை உகந்த நாள் என்ற நிலையில், இன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணி கட்சியினருக்கு சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இனி வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சி அலுவலகம் நுழைவு பகுதியில் கிருமிநாசினி மருந்து, வெப்பமானி ஆகியவற்றை வைத்து நகராட்சி அலுவலகத்திற்குள் செல்லும் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.