குமாரபாளையத்தில் வெறிச்சோடி காணப்பட்ட நகராட்சி அலுவலகம்
குமாரபாளையத்தில் தேர்தலையொட்டி பரபரப்பாக காணப்பட்ட நகராட்சி அலுவலகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.;
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, கேட்ட சின்னங்கள் கிடைக்காததால் நள்ளிரவு வரை நகராட்சி கமிஷனர் அறை முன் சுயேட்சை வேட்பாளர்கள் காத்திருப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஒட்டு எண்ணிக்கையை திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வைக்க வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி, அதிருப்தியால் தர்ணா போராட்டம் என ஜனவரி 28 முதல் பரபரப்பாக காணப்பட்ட நகராட்சி அலுவலக வளாகம் நேற்று யாரும் இல்லாத நிலையில் வெறிச்சோடி காணப்பட்டது.