குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் பொருளாதார துறை கண்காட்சி

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் பொருளாதார துறை கண்காட்சி நடைபெற்றது.;

Update: 2022-04-12 14:30 GMT

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பொருளாதார துறை கண்காட்சியை கல்லூரி முதல்வர் ரேணுகா பார்வையிட்டார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறை கண்காட்சி நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் ரேணுகா துவக்கி வைத்தார்.

பொருளாதார துறை துணை தலைவர் ரகுபதி பேசியதாவது:- நாட்டின் முன்னேற்றம் என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது. பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும். அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது பொருளாதார நிபுணர்களே ஆகும். மாணவ, மாணவியர் நேர்மையுடன் இருந்து பழக வேண்டும். இதனை செயல்படுத்துவதற்காக கல்லூரியில் ஹானஸ்ட் ஷாப் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொருளின் விலை மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். மாணாக்கர்கள் பணத்தை போட்டு விட்டு பொருளை எடுத்து வரலாம். வணிக நுட்பங்களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்த கண்காட்சி அமைந்தது. இவ்வாறு பேசினார். இதில் பேராசிரியர்கள் கீர்த்தி, சரவணாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News