செய்தியாளர்கள் போட்டோ எடுக்க நகராட்சி கமிஷனர் அனுமதி மறுப்பு

குமாரபாளையத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுப்பதை செய்தியாளர்கள் போட்டோ எடுக்க நகராட்சி கமிஷனர் அனுமதி மறுத்துள்ளார்.

Update: 2022-04-07 12:30 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் தங்கள் வார்டு கவுன்சிலர் அழகேசனுடன் புகார் மனு கொடுக்க வந்த 12வது வார்டு பொதுமக்கள்.

குமாரபாளையம் 12வது வார்டில் இரு நாட்கள் முன்பு நகராட்சி சார்பில் முன் அறிவிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அ.தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அ.தி.மு.க.வினர் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதினால் அங்குள்ள வடிகாலில் செங்கல், மண் ஆகியவை இன்னும் அகற்றப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

அதே பகுதியை சேர்ந்த ராஜகணபதி என்ற பழைய இரும்பு வியாபாரி, அவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியதுடன், ராஜகணபதி சாலையை ஆக்கிரமித்து பழைய சாமான்கள் போட்டு வைத்திருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பபடுவதாகவும் புகார் கூறினர்.

இது குறித்து வார்டு கவுன்சிலர் அழகேசன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் பலரும் நகராட்சி அலுவலகம் வந்து, கமிஷனர் சசிகலாவிடம் புகார் மனு வழங்கினர். இதனை செய்தியாளர்கள் போட்டோ எடுக்க முயன்றபோது நகராட்சி கமிஷனர் சசிகலா அனுமதி மறுத்தார்.

இதுகுறித்து சுயேட்சை கவுன்சிலர் அழகேசன் கூறுகையில், பொதுமக்கள் புகார் மனு கொடுப்பதை செய்தியாளர்கள் போட்டோ எடுப்பது வழக்கம்தான். இதற்கு அனுமதி மறுப்பது நகராட்சி நிர்வாகத்தில் உண்மை தன்மை இல்லாத நிலை ஏற்படும். இதனை கமிஷனர் தவிர்த்து, பொதுமக்கள் புகார் மனு கொடுப்பதை போட்டோ எடுக்க நிருபர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News