குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-16 09:45 GMT

குமாரபாளையம் வட்டார ஜவுளித் தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் ஜானகிராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் நூல் விலையேற்றத்தை கண்டித்து குமாரபாளையம் வட்டார ஜவுளித் தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் ஜானகிராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. நகர செயலர் செல்வம், அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, மற்றும் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.சி.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எப், ஐ.என்.டி.யூ.சி, எச்.எம்.எஸ்.தொழிற்சங்க நிர்வாகிகள் பாலுசாமி, சுப்ரமணி, பாலசுப்ரமணி, ஆறுமுகம், ஜானகிராமன், செல்வராஜ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர். நூல் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஜானகிராமன் பேசுகையில், நூல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் ஜவுளி தொழில், நாடா உற்பத்தி தொழில் தொடர்ந்து நடத்துவது கேள்விக்குறியாகும். இதனை நம்பி குமாரபாளையம் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேலனாவர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்வு கேள்விக்குறியாகும். இந்த தொழிலை நம்பித்தான் மற்ற தொழில்கள் உள்ளன. ஜவுளி தொழில் நசிவால் அனைத்து தொழில்களும் முடங்கும் நிலையில் உள்ளன. பருத்தி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். நூல் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். பருத்தி பல்கலைக்கழகம் அமைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசே நூல் விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

நிர்வாகிகள் விடியல் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம், ஜவுளி உற்பத்தியாளர் அங்கப்பன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News