பவானியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பவானியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பவானியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் விஜய் மனோகர் தலைமையில் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்காததை கண்டித்தும், அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க கோரியும், அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆக்கபூர்வமான அறிவிப்புகள், அறிக்கை இல்லாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.