குமாரபாளையத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் சேர்க்க துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே, முடிவுகளை கைவிடு, தேசத்தை பாதுகாக்கும் போரில் அர்ப்பணித்து கொள்ளும் இளைஞர்களுக்கு ஒப்பந்த முறையா? என்பது உள்ளிட்ட கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் நகர தலைவர் விஜய் ஆனந்த், வக்கீல் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் கணேஷ்குமார், மனோகரன், கேசவன், உள்பட பலர் பங்கேற்றனர்.