குமாரபாளையத்தில் 5 சாயப்பட்டறைகள் இடிப்பு: மாசுக்கட்டுபாட்டு வாரியம் அதிரடி
குமாரபாளையத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிரடி நடவடிக்கையால் 5 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிரடி நடவடிக்கையால் 5 சாயப்பட்டறை இடிக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு சாயம் போட 300க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில சாயபட்டறைகள் அனுமதி பெற்றும், பல பட்டறைகள் அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகிறது. அனுமதி பெறாமலும், கழிவுநீரை காவிரியில் கலக்க விடும் பட்டறைகள் மீது அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் பொக்லின் உதவியுடன் இடித்து வந்தனர். இது மேலும் தொடர்ந்து வருவதால் 5 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.
இது பற்றி மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வகுமார் கூறியதாவது:- அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் செயல்படக்கூடாது என அறிவித்தும், தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன் சாயக்கழிவு நீரை காவிரியில் கலக்க விடுகின்றனர். இதுசம்பந்தமாக பலரிடம் நேரில் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து செயல்பட்டதால் வெங்கடேஷ் டையிங், தண்ணீர்பந்தல்காடு, எல்லப்பன் டையிங், அஸ்வினி டையிங், தம்மண்ணன் சாலை, கே.எஸ்.எம். டையிங், அரசு மேனிலை பள்ளி சாலை, திருப்பூர் டையிங், ஆனங்கூர் சாலை, ஆகிய 5 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.
எலந்தகுட்டை பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வாரியம் சார்பாக இசைவாணை வழங்கப்பட்டு விட்டது. இதில் கடன், மானியம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் உதவி பொறியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.