லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் அருகே லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.;

Update: 2021-12-29 14:00 GMT

 நிழற்குடை இல்லாத லட்சுமி நகர் பஸ் ஸ்டாப். 

பவானியில் இருந்து  குமாரபாளையம் வரும் பயணிகள், லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து பெரும்பாலும் வர வேண்டியுள்ளது. லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம், இருக்க வசதி இல்லை. இதனால், மழை, வெயில் காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக, வயதானவர்கள், குழந்தையுடன் வரும் தாய்மார்கள் இருக்க வசதி, நிழற்கூட வசதியின்றி, பெரும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி, லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் அமைக்க நடவடிக்கைக் எடுக்க வேண்டும் என,  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News