அபாய பள்ளத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள அபாய பள்ளத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-05-03 11:30 GMT

குமாரபாளையம் சேலம் சாலை சத்யாபுரி நுழைவுப்பகுதியில் விபத்து ஏற்படும் அளவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது

குமாரபாளையம் சேலம் சாலை சத்யாபுரி நுழைவுப்பகுதியில் விபத்து ஏற்படும் அளவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் வந்த சில இதில் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் டூவீலர்களில் வரும் நபர்கள் நிலைதடுமாறி விழும் நிலையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் வசம் பலமுறை சொல்லியும் பலனில்லை.

இதே போல் ராஜம் தியேட்டர் அடுத்த கோம்பு பள்ளம் பாலம் அருகே, பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் தினசரி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் விழுந்து, பலரும் காயமடைந்து வருகிறார்கள். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பள்ளத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதனை சரி செய்ய எந்த அதிகாரிக்கும் மனமில்லை. புறவழிச்சாலையை கடந்து வரும் அனைத்து வாகனங்களும் இந்த பள்ளத்தை தாண்டிதான் வந்தாக வேண்டும்.

அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த பள்ளத்தை கடந்துதான் போக வேண்டும்.

இதன் அருகில் உள்ள வட்டமலை பகுதியில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பார்மசி கல்லூரி, நர்சிங் கல்லூரி, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆகியன உள்ளன. இதில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் இந்த வழியாகத்தான் சென்று வருகிறார்கள். மிகவும் முக்கியமான இந்த சாலை சந்திப்பில் உள்ள அபாயகரமான பள்ளத்தை இதுவரை யாரும் சரி செய்யவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதேநிலை நீடித்தால் சி.பி.எம். கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என, சி.பி.எம். நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News