குமாரபாளையம் பேருந்து நிலைய கழிப்பிடம் திறப்பதில் தாமதம்: பொதுமக்கள் அவதி

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் திறப்பு தாமாதமாவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;

Update: 2022-01-22 14:15 GMT

குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட கழிப்பிடம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நகராட்சி கழிப்பிடம் மிகவும் சேதமானதால், பல மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்டது. இதனை கட்டி முடித்து பல நாட்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது.

பேருந்து நிலைய நகராட்சி கடையினர், டெம்போ, கார், ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால், பல மாதங்களாக இந்த கழிப்பிட கட்டுமானப் பணி நடைபெற்று வந்ததால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் ரோட்டரி சங்க பழைய கழிப்பிடத்தில் குறைந்த அறைகளே உள்ளதால், ஏராளமானோர் போதுமான கழிப்பிட வசதி இல்லாமல் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர். கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிப்பிட கட்டிடத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், நகராட்சி கழிப்பிடம் ஏலம் விடப்பட்டு ஒப்படைக்கப்படும். அதுவரை நகராட்சி பணியாளர்கள் மூலம் ஜனவரி 24 முதல் செயல்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News