குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகள்

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி சீருடை,பாத்திரம், ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது.;

Update: 2021-11-01 13:45 GMT

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி சீருடை,பாத்திரம், ஸ்வீட் பாக்ஸ்களை கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமையில் தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் வழங்கி தொடங்கி வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு, மலேரியா பணியாளர்கள், மயான பணியாளர்கள் உள்பட 150 பேருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி நகராட்சி அலுவலர்கள் பங்களிப்புடன் சீருடை,பாத்திரம், ஸ்வீட் பாக்ஸ் வழங்கும் நிகழ்வு கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமையில் நடைபெற்றது.

தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் பங்கேற்று அனவைருக்கும் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

பின்னர் பேசிய நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, கொரோனா காலத்தில் தீவிரமாக பாடுபட்டு கொரோனா பரவலை கட்டுபடுத்த உதவிய உங்கள் பணி போற்றத்தக்கது. இந்த மழைக்காலத்தில் கோம்பு பள்ளத்தில் உள்ள புதர்களை அகற்றி எளிதாக மழைநீர் செல்ல பாதை அமைத்தது பாராட்டத்தக்கது.

பருவ மழை காலங்களில் தீவிரமடையும் மலேரியா, டெங்கு நோய் பரவலை தடுக்கவும், தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து வார்டுகளிலும், வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து, தடுப்பூசி போட்டுக்கொண்டவ்ர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தை நெருங்கச் செய்த பணி போற்றுதலுக்கு உரியது. அனைவர்க்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என பேசினார்.

பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News