மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஒரு நாளாக மாற்ற முடிவு
மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஒரு நாளாக மாற்றம் செய்யப்பட்டது
அரசு வழக்கறிஞர் அத்துமீறலை கண்டித்து குமாரபாளையம் நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் 3 நாட்கள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். அதன் முதல் நாள் பணிகள் புறக்கணிப்பு நடந்தது.
இந்நிலையில் குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது: அரசு பெண் வழக்கறிஞர் பணியிட மாறுதலில் செல்வதாலும், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படுவதாலும், பொதுமக்களும் அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஒரு நாள் புறக்கணிப்பாக மாற்றம் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.