அடையாளம் தெரியாத நபர் சாவு
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை வருகின்றனர்.;
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத 40 வயதுடைய ஆண் பிரேதம் கிடந்துள்ளது. இதுகுறித்து வி.ஏ.ஒ. முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் குமாரபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில் இறந்த நபர் சில நாட்களாக குடி போதையில் இந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், யார்? என்ன விபரம் என்று தெரியவில்லை, எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.