கிணற்றில் தவறி விழுந்த முதியவர் இறப்பு
குமாரபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் இறந்தார்;
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் இறப்பு - குமாரபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கிராமம் ஆயி கவுண்டன்பாளையம் பகுதியில் வசிக்கும் குப்பண்ண கவுண்டர் மகன் சீரங்க கவுண்டர், 74, என்பவர் நேற்றுமுன்தினம் மாலை 5 மணி அளவில் விவசாய கிணற்றின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது கிணற்றில் தவறி விழுந்து விட்டார். சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த தீயணைப்பு படையினர், கிணற்றில் விழுந்தவரை சடலமாக மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.