குமாரபாளையத்தில் லாரி உரசியதால் மின் கம்பம் சேதம்

குமாரபாளையத்தில் கரும்பு லாரி மின் கம்பிகளில் சிக்கியதில் 3 மின் கம்பங்கள் சாய்ந்தன.

Update: 2022-04-26 00:53 GMT

குமாரபாளையத்தில் காவேரி நகர் பகுதியில் கரும்பு லாரி மின் கம்பி மீது மோதியதில் சாய்ந்த 3 மின் கம்பங்கள் சாய்ந்தன.

குமாரபாளையத்தில் கரும்பு லாரி மின் கம்பிகளில் சிக்கியதில் 3 மின் கம்பங்கள் சாய்ந்தன.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை பகுதியில் தேவூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, வெள்ளாளபாளையம், செட்டிபட்டி, அரசிராமணி உள்ளிட்ட பல கிராமங்களில் விளையும் கரும்புகளை பள்ளிபாளையம் அருகே உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல லாரிகள், டிராக்டர்கள் குமாரபாளையம் வழியாக வருவது வழக்கம். இதில் மின் கம்பிகள் அறுந்து விடுவது, மின் கம்பங்கள் சாய்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் கரும்பு லோடு ஏற்றிய லாரி, காவேரி நகர் பகுதியில் வரும் போது, மின் கம்பிகள் கரும்பில் சிக்கி இழுத்து வந்ததில் 3 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பு வழங்கும் பணியை செய்தனர். குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து விசாரணை செய்ததில், லாரியின் உரிமையாளர் இடைப்பாடியை சேர்ந்த தங்கவேல் என்பதும், லாரியை ஒட்டி வந்தவர் மணிகண்டன் 38, என்பதும் தெரியவந்தது. மின்வாரிய அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

Tags:    

Similar News