குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட தினசரி காய்கறி வியாபாரிகள்
தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் எப்போதும் ஒரே சங்கமாக இருக்க வேண்டும்.2-ஆவது சங்கம் வேண்டாம் என வலியுறுத்தினர்;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் வியாபாரிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம், பல வருடங்களாக கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் செயல்பட்டு வந்தது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் குமாரபாளையம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் உருவானது. இதன் தலைவராக துரைசாமி, செயலராக சீனிவாசன், பொருளராக தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், வெங்கிடு தலைமையிலான பழைய சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு போலீஸ் ஸ்டேஷன் வந்து முற்றுகையிட்டனர்.
இது பற்றி, நகர அதிமுக செயலர் கூறியதாவது: தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் எப்போதும் ஒரே சங்கமாக இருக்க வேண்டும். இரண்டாவது சங்கம் வேண்டாம். அனைவரையும் அழைத்து பேசி ஒரே சங்கமாக எப்போதும் போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளோம் என்று கூறினார்.