தினசரி காய்கறி மார்க்கெட் இரு சங்கத்தினரிடம் டி.எஸ்.பி. விசாரணை

குமாரபாளையம் நகராட்சி சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகளின் இரண்டு சங்கங்களுக்கே இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், போலீசார் சமரசம் செய்தனர்.

Update: 2024-12-19 13:30 GMT

படவிளக்கம் ;

குமாரபாளையம் தினசரி மார்க்கெட் இரு சங்கங்கள் தகராறு சம்பந்தமாக டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் விசாரணை நடந்த போது, மார்க்கெட் வியாபாரிகள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர்.

தினசரி காய்கறி மார்க்கெட் இரு சங்கத்தினரிடம் டி.எஸ்.பி. விசாரணை

குமாரபாளையம் நகராட்சி சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகளின் இரண்டு சங்கங்களுக்கே இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், போலீசார் சமரசம் செய்தனர்.

குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகளின் இரு சங்கங்கள் உள்ளன. சந்து பொங்கல் நடத்துவது தொடர்பாக இரு சங்கத்தினருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதில் ஒரு தரப்பினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் குமாரபாளையம் நகராட்சி ஆணையரிடமும் புகார் தெரிவித்ததன் காரணமாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழ்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் ஒரு சங்கத்தின் சார்பில் சந்து பொங்கல் விழா நடைபெற்ற பொழுது, ஒரு தரப்பினர் விடுமுறை அறிவித்து இருந்த நிலையில், மற்றொரு தரப்பினர் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தினர். இதனால், ஆத்திரம் அடைந்த சந்து பொங்கல் விழா நடத்திய தரப்பினர், எதிர் தரப்பு சங்க செயலாளர் தாமோதரதனை கும்பலாக சென்று அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த தாமோதரன், தற்போது பவானி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த சி.சி.டி.வி காட்சி தற்பொழுது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது சம்பந்தமாக டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் விசாரணை நடந்தது. இதில் சமரசம் ஏற்பட்டது. இது தரப்பினரும் பிரச்சனையை வளர்க்காமல் சமரசமாக இருந்து வாருங்கள் என்று டி.எஸ்.பி. இமயவரம்பன் அறிவுரை கூறினார்.

Tags:    

Similar News