அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தினமும் பயிறு வகைகள் கொடுக்கும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தினமும் பயிறு வகைகள் கொடுக்கும் பணி தனியார் தொண்டு நிறுவனத்தினரால் துவக்கப்பட்டது.;

Update: 2022-07-21 10:15 GMT

குமாரபாளையம் பாரதி நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு சுத்துக்கள் நிறைந்த பயிறு வகைகள் தினமும் வழங்கும் பணியை இனி ஒரு விதி செய்வோம் அமைப்பின் நிர்வாகி கவிதா ஜனார்த்தனன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தினமும் பயிறு வகைகள் கொடுக்கும் பணி தனியார் தொண்டு நிறுவனத்தாரால் துவக்கப்பட்டது.

இனி ஒரு விதி செய்வோம் பொதுநல அமைப்பின் சார்பில் பள்ளி கட்டுமான பணிகள், உணவு, உடைகள் வழங்குதல், கல்வி உதவி தொகை வழங்கல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் பாரதி நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு சுத்துக்கள் நிறைந்த பயிறு வகைகள் தினமும் வழங்கும் பணியை அமைப்பின் நிர்வாகி கவிதா ஜனார்த்தனன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை பூங்கோதை தலைமை வகித்தார்.

மேலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆட்டுப்பாலில் தயாரிக்கப்பட்ட சோப்பு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விடியல் பிரகாஷ், தீனா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News