குமாரபாளையம் அரசு கல்லூரியில் நடந்த இணைய குற்ற விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் இணைய குற்ற விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update: 2024-10-26 10:30 GMT

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இணைய வழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாமில் இன்ஸ்பெக்டர் தவமணி பேசினார்.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் இணைய குற்ற விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குமாரபாளையம் பகுதியில் இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது குறித்து விழிப்புணர்வு முகாம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது.

இதில் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

போதை பொருட்களினால் தீமை ஏற்படுகிறது. அதனை வாங்க கூடாது. அப்படிப்பட்ட நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. உங்களுக்கு பல லட்சம் பரிசு கிடைத்துள்ளது. உங்கள் ஆதார், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை யாராவது கேட்டால் சொல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேராசிரியர்கள் ரகுபதி, ஞானதீபன், சரவணாதேவி, ரமேஷ்குமார், எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ. குணசேகரன், ராம்குமார், மாதேஸ்வரன், பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News