ஊரடங்கு நீட்டிப்பு பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பும் மக்கள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமுலில் உள்ளது!

Update: 2021-05-29 10:00 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று அலை 2 பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நேற்று காலை தமிழக அரசு தொற்று பரவல் குறையாத காரணத்தினால் தமிழக அரசு இன்னும் ஒரு வாரத்திற்கு 7/6/2021 வரை முழு ஊரடங்கு அறிவித்தது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும் முழு ஊரடங்கு வெளியே செல்ல முடியாது என்பதல் பொதுமக்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம்,தாயம் ,ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இது குறித்து பொதுமக்கள் கூறிய போது லாக் டவுனால் வருமானமின்றி வீட்டில் இருந்தாலும் வீட்டிற்குள் இருந்தாலும் இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் பொழுதுபோக்கி வருவதாகவும் வெளியே செல்ல முடியாத சூழலுக்கு இந்த விளையாட்டுகள் உற்சாகத்தையும் நேரத்தையும் போக்கி வருவதாக தெரிவித்தனர்.



Tags:    

Similar News