பள்ளிபாளையம் ரேஷன் கடையில் குவிந்த மக்கள்: காற்றில் பறந்த சமூக இடைவெளி..!

ஒரே இடத்தில் டோக்கன் வழங்கபட்டதாலும் பொதுமக்கள் அதிகம் கூடியதாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2021-06-11 11:27 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு இந்த மாதத்துக்கான ரேஷன் பொருளில் 14-வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அதற்கான டோக்கன் இன்று முதல் வீடுதோறும் வழங்கப்படுமென அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியில் 5 ரேஷன் கடைகள் ஒரே பகுதியில் செயல்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு நேரடியாக டோக்கன்களை கொடுக்கும் வகையில் மதிய அளவில் டோக்கன் வழங்க நியாயவிலைக் கடை ஊழியர்கள் பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதிக்கு சென்றனர்.

டோக்கன் வழங்கபடுவதாக அக்கம் பக்கத்தினரிடையே தகவல் பரவியது இதனால் ஏராளமானவர்கள் டோக்கனை பெற கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கனை முறையாக விநியோகிக்க முடியாமல் தவித்துப் போயினர். அதன்பிறகு அங்கு விரைந்த காவல்துறையினர் கூட்டத்தினரை கட்டுப்படுத்தினர் இதன்பிறகு டோக்கன்களை முறையாக ஊழியர்கள் வழங்கிச் சென்றனர். 

Tags:    

Similar News