குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள்

குமாரபாளையத்தில் நடந்த இன்றைய கிரைம் செய்திகள்;

Update: 2023-08-06 10:00 GMT

குமாரபாளையம்  க்ரைம் செய்தி (பைல் படம்).

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

இரவு தறி வேலைக்கு செல்ல நேரமாக தூங்கியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

குமாரபாளையத்தில் இரவு தறி வேலைக்கு செல்ல நேரமாக தூங்கியவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிப்பவர் விஜயகுமார், 41. விசைத்தறி கூலி. நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணி சிப்ட்டுக்கு போக வேண்டும் எனக்கூறி, வீட்டில் மாலை 05:00 மணியளவில் தூங்கச்   சென்றுள்ளார். இவரது அம்மா இவரை மாலை 06:50 மணியளவில் எழுப்பச்  சென்ற போது, வாயில் நுரை தள்ளியபடி படுத்திருந்தார். இவரை குமாரபாளையம் ஜி.ஹெச். க்கு அழைத்து சென்று காட்டிய போது, இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என டாக்டர் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

________________________________

இரண்டு பேர்  பலியாக காரணமான டெம்போ ஓட்டுனர் கைது

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர் காஸி, 30. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஜவுளி தயாரிப்பு ஆலையில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.சேலம் மாவட்டம் அரியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு, தனது மாமியார் தாரா காஸி, 50, மற்றும் மனைவி பாத்திமா ஆகிய மூவரும் ஹோண்டா டியோ டூவீலரில் பெருந்துறை நோக்கி, நேற்றுமுன்தினம் காலை 08:00 மணியளவில் சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் மூன்று பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வட மாநில தொழிலாளி ஜஹாங்கீர் காஸி, மற்றும் அவரது மாமியார் தாரா காசி ஆகியோர் உயிரிழந்தனர்.

பாத்திமா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர், குமாரபாளையம் அருகே நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, 38, 38என்பவரை இன்ஸ்பெக்டர் தவமணி கைது செய்தார்.

Tags:    

Similar News